--- --:--:-- --

முதலமைச்சருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி சந்திப்பு..!

1

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நேரடியாக இருப்பதாகவும் கூறுகிறார்.

 

இட ஒதுக்கீட்டின் மூலமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பயன் பெற்றவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon