விராட் கோலியின் ஒன்பது மாத குழந்தைக்கு சமூகவலைதளத்தில் மிரட்டல்..!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஒன்பது மாத குழந்தைக்கு சமூகவலைதளத்தில் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விராட்கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா தம்பதியினரின் 9 மாதங்களுக்கு டுவிட்டரில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததால் விராட் கோலிக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் முகமது ஷமியின் பந்துவீச்சில் விமர்சித்த நபர்களுக்கு எதிராக விராட்கோலி கருத்து தெரிவித்திருந்தார். இதனால் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ள டெல்லி பெண்கள் ஆணையம் இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை தங்களுக்கு தெரியப்படுத்துமாறு டெல்லி போலீசாரை கேட்டுக் கொண்டுள்ளது.






