--- --:--:-- --

அம்மா மாதிரி எனக்கு ஏன் தலைமுடி நீளமா இல்ல என சிணுங்கிய குழந்தை..!

6

தனது அம்மாவின் நீண்ட தலைமுடியை தொட்டுப்பார்த்த குட்டி குழந்தை தனக்கும் அம்மா போன்று நீளமான முடி உள்ளதா என தனது தலையைத் தொட்டுப் பார்க்கும் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

குழந்தை விளையாடிக் கொண்டிருக்க அதனை ஒருவர் படம்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் தனது தாய் படுத்திருக்க அந்த குழந்தை தனது தாயின் நீண்ட தலைமுடியை பிடித்து விளையாடியது.

 

அதை பிடித்து இழுக்க முடி தனது தாயின் தலையில் இருந்து தான் நீண்டு வருகிறது என்பதை அறிந்து அந்த சுட்டி குழந்தை சிறிதும் தாமதிக்காமல் தனது சின்னஞ்சிறு கைகளை தூக்கி தன் தலையைத் தொட்டுப் பார்த்தது.

 

அம்மா போல தனக்கும் தலையில் நீளமான முடி இல்லை என்பதை அறிந்து சினுங்க தொடங்கியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon