--- --:--:-- --

சூர்யா படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள முதல்வர்..!

2

ஜெய்பீம் படக்குழுவினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வாதாடிய வழக்கு ஒன்றின் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் சிறப்பு காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்த்து விட்டதாகவும் நேர்மையும் மனசாட்சி உள்ள அதிகாரிகளால் உண்மை நிலை நாட்டப்படும் என்பதை படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது என்று முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மேலும் ஜெய்பீம் திரைப்படம் 1976ஆம் ஆண்டில் மிசா சட்டத்தின் படி கைது செய்யப்பட்டதையும், சென்னை மத்திய சிறையில் விழுந்த பல அடிகளை நினைவுபடுத்துவதாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

படம் எடுத்ததோடு இல்லாமல் பழங்குடியினர் பாதுகாப்பு சங்க மேம்பாட்டிற்கு ஒரு கோடி ரூபாயை வழங்கியதற்கு சூர்யாவை பாராட்டுவதாக கூறியுள்ளார். முதல்வரின் உணர்வுபூர்வமான பாராட்டு ஜெய்பீம் படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருப்பதாக நடிகர் சூர்யா குறிப்பிட்டிருக்கிறார்.

 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். முதல்வரை பாராட்ட வார்த்தைகள் இன்றி நெகிழ்ந்து நிற்பதாக தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon