ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுப்போருக்கு தங்க நாணயம், ஆடு பரிசு..!
திருவாரூரில் துணிக்கடை ஒன்றில் தீபாவளி ஆஃபர் ஆக ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுப்பதற்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக ஆடும் வழங்கப்படும் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.
அந்த கடையில் தீபாவளி பண்டிகை விற்பனையை அதிகரிக்க இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்குவோருக்கு குலுக்கல் முறையில் சீட்டு வழங்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாவது மூன்றாவது நான்காவது பரிசாக ஆடும். ஐந்தாவது பரிசாக 25 நபர்களுக்கு பட்டுப்புடவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






