பள்ளி மாணவியிடம் தொலைபேசியில் உரையாடிய முதல்வர்..!
பள்ளிகள் திறப்பு குறித்து கடிதம் எழுதிய கிருஷ்ணகிரியை சேர்ந்த பள்ளி மாணவியிடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரவிராஜ் என்பவரின் மகள்கள் ரெஜினா மற்றும் ரேசுதா.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் கடிதத்தைப் படித்த முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக இரு மாணவிகளையும் அழைத்து பேசியுள்ளார்.
முதலமைச்சருடன் உரையாடியது மிக நெகிழ்ச்சியான தருணம் என்று அவர்கள் கூறியுள்ளார்.







