--- --:--:-- --

நமீதாவுக்கு காயம்..! வீட்டை விட்டு வெளியேற தாமரை செல்வி தான் காரணமா.?

4

சமூகத்தில் பிரபலம் இல்லாதவர்களையும் பிரபலப்படுத்துவதற்காக வீட்டில் 100 நாட்கள் அடைத்து வைத்து அவர்களின் குணாதிசயங்களை கேமராவை வைத்து 100 காட்டும் பிக் பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் 5 வது சீசன் தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அதில் போட்டியாளராக பங்கேற்ற திருநங்கை நமீதாவை இந்த வாரம் காணவில்லை.

 

தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வெளியேறியதாக சொல்லப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் வைத்து நமீதா மாரிமுத்துவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதாகவும் பரிசோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனை தரப்பில் விசாரித்ததில் அவருக்கு கொரொனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. காயத்திற்கான முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் அவரை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

நமீதாவுக்கும் சக போட்டியாளரான தாமரைச்செல்வி என்பவருக்கும் இடையே நீடித்து வந்த வார்த்தை முற்றிய நிலையில் அது சண்டையாக ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால் நமீதாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon