ஈரோடு மாவட்டத்தில் கிராமத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கிராமத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்த ஊர் மக்கள் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
உமாரெட்டியூர் பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு ஊர்ந்து சென்று கொண்டிருந்த 10 அடி நீள மலைப்பாம்பு கிராம மக்கள் பிடித்துள்ளனர். இதையடுத்து மலைப்பாம்பு பிடிபட்ட தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மலைப்பகுதியில் விடுவித்தனர்.






