தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் இருபத்தி இரண்டு நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 570 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நாளை நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.






