பலத்த பாதுகாப்புடன் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா..!
உத்திரபிரதேச மாநிலத்தில் போதையில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவை காவல்துறையினர் அங்குள்ள காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
பலத்த பாதுகாப்புடன் விசாரணை நடைபெறும் அலுவலகத்தின் பின்புறம் வழியாக அவர் அழைத்து செல்லப்பட்டார்.
நேற்று அவர் காவல்துறையினர் விசாரணைக்கு வராத நிலையில் உடல் நலக் கோளாறு காரணமாக அவர் விசாரணைக்கு செல்லவில்லை என்றும் இன்று விசாரணையை எதிர்கொள்ள செல்வார் என்றும் அவரது தந்தையும் மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா தெரிவித்திருந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.






