அவதார் திரைப்படத்தின் 2ம் பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
PluzMedia.com
அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் திரைக்கு வந்த அவதார் திரைப்படம் சாதனை நிகழ்த்தியது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கற்பனை உலகமும் கிராஃபிக் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் டிசம்பர் 2021 ல் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. கொரொனா பொதுமுடக்கம் காரணமாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.






