விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி..!
விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை கோல்டன் ஹவர் எனப்படும் முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து உயிர்காப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் தவிர தேசிய அளவில் 10 விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பெற்றவர்களில் மிகுந்த தகுதியானவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






