காதலியை தன்னிடம் பேசவைக்ககோரி கடவுளுக்கு கடிதம் எழுதிய இளைஞர்..!
காதலியை தன்னுடன் பேச வைக்குமாறு கடவுளுக்கு அவ்வப்போது கடிதம் அனுப்பி வருகிறார் ஒரு இளைஞர். மதுரை அவனியாபுரம் பகுதியில் பாரதியார் காலத்தில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு தினமும் வெங்கடேசன் என்ற பக்தர் ஒருவர் கடிதம் எழுதி வருகிறார். கடிதத்தில் முன்பகுதியில் தினமும் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள் என்று எழுதியுள்ளார்.
அதே போல் கடிதத்தை திறந்து பார்த்த பொழுது அம்மா அப்பா சரணம் அனுஷாவின் பேச வையுங்கள், தினமும் பலமுறை பேச வையுங்கள் என்று எழுதுகிறார். வெங்கடேசன் என்ற பெயரில் தினமும் கடிதம் எழுதி வருவதாகவும் அ கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.






