உணவு வினியோகம் செய்வது போல கஞ்சா விற்பனை செய்து வந்த 4 பேர் கைது..!
கர்நாடகாவில் உணவு வினியோகம் செய்வது போல கஞ்சா விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு மற்றும் சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் உயர்தர கஞ்சா விற்பனை புழக்கம் அதிகரித்து வந்தது.
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது அவர் உணவு டெலிவரி செய்வது போல ஏழு பேர் கொண்ட குழுவினர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 650 கிலோ கஞ்சாவை 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.







