போலீசாரால் கணவர் அடித்து கொல்லப்பட்டதாக மனைவி புகார்..!
உத்திரப்பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் போலீசார் தாக்கி உயிரிழந்ததாக கூறும் தொழிலதிபரின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மனீஷ் குப்தா என்பவர் கோரக்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். நள்ளிரவில் ஹோட்டலில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார் மணிஷை அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
கொலையை மறைக்க போலீசார் முயன்றதாக மனிஷின் மனைவி குற்றம் சாட்டியது உடன் நீதி கேட்டு அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மனிஷின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தலைமறைவான காவலர்கள் தேடப்பட்டு வரும் நிலையில் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவதாகவும் மனைவிக்கு அரசு வேலையும், 40 லட்ச ரூபாரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






