பெண்களுக்காக முதல்வர் அறிவித்துள்ள அதிரடி அறிவிப்பு..!
பெண்கள் பெயரில் நிலம் இருந்தால் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சிவ்புரியில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சில நியாயவிலை கடைகளை சுய உதவிக்குழு பெண்கள் நடத்துவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் நிலையங்களிலும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப் படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பெயரில் நிலம் இருந்தால் அதற்கான பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். கிராமங்களில் மின்சார கட்டணத்தை பெண்கள் வசூல் செய்வார்கள் என்று தெரிவித்த அவர் அவற்றை 10% அவர்களின் ஊதியம் கணக்கில் செலுத்தப்படும் என கூறியுள்ளார்.






