மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு..!
சென்னை மண்ணடியில் மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணடி இப்ராஹிம் சாலை 2வது தெருவில் மூன்றாவது மாடியில் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்ததாகவும் இதனால் குழந்தை பலியானதாகவும் தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






