ஓடும் பைக் மீது நின்றபடி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்..!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஓடும் பைக் மீது நின்றபடி பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கேடிஎம், பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் இரண்டு பேர் திடீரென பைக்கில் இருந்து எழுந்து சீட் மீது நின்றபடி தங்களது பேன்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுடுவது போன்ற வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
வாகன பதிவு எண்களை அகற்றிவிட்டு சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






