சிறுத்தை குட்டியை குழந்தை போல் தூக்கி வைத்த மக்கள்..!
மும்பையில் மழையில் நனைந்தபடி தெருவில் நடந்து சென்று சிறுத்தை குட்டியை விலங்குகள் நல அமைப்பினர் மீட்டனர். மும்பையில் தாயைப் பிரிந்து வனப்பகுதியில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் வந்த சிறுத்தை குட்டி ஒன்று அங்குள்ள நகரத்திற்குள் நுழைய முயன்றது.
இதனை பார்த்த மக்கள் விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த அமைப்பினர் மழையில் நனைந்து சேறும் சகதியுமாக இருந்த சிறுத்தை குட்டியை மீட்டு அதனை சிறு பிள்ளை போல கம்பளி போர்த்தி தூங்க வைத்துள்ளனர்.






