--- --:--:-- --

குளிர்ந்த நீரில் மிதந்தபடி இருந்த மனிதர்..!

3

கொடைக்கானலில் நட்சத்திர ஏரியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். கொடைக்கானலில் முக்கியமான சுற்றுலா பகுதியான நட்சத்திர எரி நகரின் மையப் பகுதியில் உள்ளது.

 

இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த ஏரி நீரின் குளிர்ச்சி மைனஸ் டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருப்பதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட தங்கபாண்டி என்பவர் ஏரி நீரில் குதித்துக் குளித்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் இளைஞரை மீட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Right Menu Icon