காதலன் கட்டாயத்தால் யூடியூபில் வீடியோ பார்த்து கருவை கலைத்த பெண்..!
நாக்பூரில் காதலனின் கட்டாயத்தின் பேரில் யூடியூபிள் வீடியோ பார்த்து கருவை கலைத்துள்ளார் பெண். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை சொஹைல் என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே 2 முறை திருமணமான இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் தற்போதும் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு பெண்மணியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி எல்லை மீறியதால் கர்ப்பமடைந்த அந்த பெண்ணை கருவை கலைக்க வற்புறுத்தியுள்ளார்.
கருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். யாருக்கும் தெரியாமல் யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்யுமாறு கட்டாயப்படுத்த , அதன்படி குடும்பத்தினர் மும்பைக்கு சென்று விட்ட போது வீட்டில் தனியாக இருந்த அந்த பெண் கருவை கலைத்து உள்ளார்.
பின் கருவை இடுக்காட்டிற்கு கொண்டு சென்று காதலன் புதைத்துள்ளார். இதனையடுத்து காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.






