சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 24 பேர்..!
மும்பை அடுத்த தானே பகுதியில் சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் கொடுமைகள் ஈடுபட்ட விவகாரத்தில் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
15 வயது சிறுமியுடன் பழகிய ஒருவர் அவரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. கடந்த 9 மாதங்களாக அவனும் அவனது கூட்டாளிகளும் மிரட்டி அந்த சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அத்தனை பேரையும் சிறுமி அடையாளம் காட்டி இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.






