--- --:--:-- --

முதியவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாய் திருட்டு..!

8

புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்றபோது அவரின் கவனத்தை திசை திருப்பி ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கந்தர்வகோட்டை கீழ தெருவை சேர்ந்த முதியவர் ரகுபதி. கந்தர்வகோட்டையில் உள்ள ஸ்டேட் வங்கியில் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அதை ஒரு பையில் வைத்தார். பின்னர் அந்த பையை தோளில் மாட்டிக் கொண்டு சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் ரகுபதியின் கவனத்தை திசை திருப்புவதற்கு சில பத்து ரூபாய் நோட்டுகளை சைக்கிளின் பின் பகுதியில் சிதற விட்டு அவரிடம் உங்கள் பணம் கீழே கிடப்பதாக கூறியிருக்கின்றனர். உடனே இறங்கி தனது சைக்கிளை நிறுத்திவிட்டு பத்து ரூபாய் நோட்டுகளை பொறுக்கி எடுக்க தொடங்கினர்.

 

அப்போது ஒரு லட்சத்தை திருடிக் கொண்டு சென்று விட்டனர். இதனால் ரகுபதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon