--- --:--:-- --

சேலை அணிந்து உணவகத்திற்கு சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுத்த விவகாரம் ..!

5

டெல்லியில் சேலை அணிந்து உணவகத்திற்கு சென்ற பெண்ணுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லியில் வணிக வளாகத்தில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

 

இந்த உணவகத்திற்குள் சேலை அணிந்து கொண்டு இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பெண் உணவருந்த சென்ற போது அங்கிருந்த பணியாளர்கள் இந்த உணவகத்தில் சேலை அணிந்து கொண்டு வந்தால் அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர்.

 

இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். எனவே தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon