--- --:--:-- --

சி‌பி‌எஸ்‌இ வெளியிட்டுள்ள புதிய கட்டண சலுகை..!

4

பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்று மத்திய இடைநிலைகல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

 

கொரொனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

 

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon