பிரதமர் மோடியின் பிறந்த நாளில் நிகழ்த்தப்பட்ட சாதனை..!
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இரண்டு கோடியே 25 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை நிகழ்த்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதன் மூலம் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இரண்டு கோடியே 50 லட்சம் கொரொனா தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.






