இறுதியாண்டு மாணவர் மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை..!
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் பயின்ற ரஞ்சித் குமார் என்ற மாணவர் மருத்துவமனை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த மாணவர் ரஞ்சித்குமார் 5 ஆண்டு படிப்பை நிறைவுசெய்யாமல் அரியர் இருந்ததாகவும் சக மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு மருத்துவராகப் பணியாற்றும் நிலையில் தான் இன்னும் முடிக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
காதல் தோல்வியும் ரஞ்சித்குமார் விபரீத முடிவை எடுத்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.






