கோவையில் கல்லூரியில் படிக்கும் 46 பேருக்கு கொரொனா தொற்று..!
கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் 46 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 42 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கொரொனா முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.
நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல இயங்கிவரும் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.






