--- --:--:-- --

தங்கத்தாலான தலைமுடிகளை நடவு செய்துள்ள சிங்கர்..!

7

இசையமைப்பாளர் ஒருவர் தங்கத்தாலான தலைமுடிகளை இம்பிளன்டேஷன் முறையில் நடவு செய்து உள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மெக்சிகோவை சேர்ந்த 23 வயதாகும் பாப் இசை கலைஞர் தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவர் தனது தலைமுடிகளை முழுவதுமாக வழித்து விட்டு தங்கத்தாலான தலைமுடிகளை அறுவை சிகிச்சைகள் மூலம் செயற்கை முறையில் திருத்தியுள்ளனர்.

 

அதில் தன்னை போல் யாரும் முயற்சி செய்து பார்க்க மாட்டார்கள் என கிண்டலாக கூறியுள்ளார். தலையில் முடி அடர்த்தியாக இல்லையெனில் செயற்கை முறையில் நாற்று நடுவது போல தலைமுடிகளை நடவு செய்வது வழக்கம்.

 

பிரபலமான சினிமா நடிகர்கள் சிலர் இந்த முறையில் தலைமுடிகளை வைத்து தங்கள் அழகை கூட்டி கொள்வது வழக்கம். ஆனால் இசையமைப்பாளர் ஒருவர் தங்கத்தாலான தலைமுடிகளை நடவு செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon