யு.பி.ஐ கட்டண விதிப்பு தள்ளிப் போகிறதா?
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் என கூறப்பட்டது. மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் கட்டணம் அக். 15 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. கட்டண விதிப்பை மேலும் சில மாதங்களுக்கு தள்ளிவைக்க என்.பி.சி.ஐ (NPCI)-யிடம் தொடர்ந்து வர்த்தக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
என்.பி.சி.ஐ விரைவில் முடிவு எடுக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், யு.பி.ஐ பரிவர்த்தனை கட்டண விதிப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




