மூன்று முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட மூதாட்டி..!
மூதாட்டிக்கு மூன்று முறை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது 70 வயது மூதாட்டிக்கு ஏற்கனவே இரண்டு முறை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக தடுப்பூசி செலுத்தப்படுவதாக மூதாட்டியின் மகன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டியின் மகன் சிவக்குமார் ஏற்கனவே தனது தாய்க்கு இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று உள்ளது .
இந்த முகாமில் மருத்துவ முகாம் என நினைத்து பரிசோதனைக்கு மூதாட்டி சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என மருத்துவரிடம் விளக்கம் கேட்டு உள்ளதாக கூறினார்.






