--- --:--:-- --

சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது நீட் விலக்கு மசோதா..!

1

ருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் மாணவ மாணவிகள் பலர் நீட்தேர்வு மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

 

அதன்படி நீதியரசர் ராஜன் குழு அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்பட்டன . இந்த நிலையில் நுழைவுத் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு கேட்டு சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

நீதியரசர்கள் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மசோதா தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. நீட்தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாட்டை சேர்ந்த பெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் உறுதியாக இருப்பதால் நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காவல்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதில் அளிக்கிறார். அப்பொழுது முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon