--- --:--:-- --

பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!

2

ள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் வேலை நிமித்தமாக திருக்கோவிலூர் சென்றுள்ளார். மாலை பேருந்து நிலைய வளாகத்தில் அமர்ந்து பார்சலில் வாங்கி வந்த பொருட்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

வாயில் வைத்த பரோட்டாவோடு அவரது உயிர் பிரிந்த நிலையில் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon