--- --:--:-- --

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு..!

11

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களிலும் ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீலகிரி, கோவையில் கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon