கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் திருப்பணிக்குழு 2-வது ஆலோசனை கூட்டம்
கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருப்பணிக்குழு சார்பில், 2-வது ஆலோசனை கூட்டம் காரைக்குடியில் நடந்தது. கூட்டத்திற்கு திருப்பணிக்குழு தலைவர் எஸ்.பி.ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் மா. சேகர் முன்னிலை வகித்தார். பொருளாளர் மு.கண்ணதாசன் வரவேற்று பேசினார்.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தில், ஆலயத்தின் தென்பகுதியில் ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு சிறிய கோவில் அமைத்தல், பரிவார தெய்வங்களுக்கு பூசும் பணியை விரைவுபடுத்துதல், நன்கொடை வசூல் வேகப்படுத்துதல், உறுதி அளித்த நன்கொடையாளர்கள் கருவறை கதவு, மண்டபத்தில் கிரில் கேட் அமைப்பது, டைல்ஸ், மின் இணைப்பு, கோபுரத்திற்கு பெயின்ட் வாங்கி கொடுப்பது மேலும் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மா.வேலுச்சாமி, துணைப் பொருளாளர் சு.ராமக்கண்ணன், செய்தி தொடர்பாளர் மு.தெய்வீகராஜன், உறுப்பினர்கள் கோ.கண்ணன், கோ.நல்லதம்பி, மு.கருணாகரன் மற்றும் கோவில் பங்குதாரர்கள் கீழக்கோட்டை கோவிந்தன்,மாரி, வட்டாணம் சுக்குவெட்டி,முருகன்,சிவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருப்பணிக்குழுவினர் பெரியமாத்தூர் சிற்பக் கலைக்கூடத்திற்கு நேரில் சென்று, புதிதாக ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர், ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிலைகள் செதுக்க ஆடர் கொடுக்கப்பட்டது.






