--- --:--:-- --

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானம் நிறைவேற்றம்..!

5

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் அரசினர் தனி தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் முன்மொழிந்தார்.

 

அதில் ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டு ஏற்றிய குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பின்மைக் கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்க்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அகதிகளாக வருபவர்களை மனரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் சட்டம் ஏற்றப்பட்டு இருப்பதாக தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் போற்றி பாதுகாக்கவும் மதச்சார்பின்மை கோட்பாட்டினை நிலைநிறுத்தவும் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துவதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தீர்மானத்தை முன்மொழிந்த போது பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றார். மத்திய அரசு இலங்கை தமிழர்களை பற்றி கவலைப்படவில்லை என்றும் சாடியுள்ளார்.

 

இதனையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon