சாலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலம்..! கொலையா..?
கோவையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. இந்த பெண்ணின் உடலை யார் வீசிச் சென்றது யார் என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனைச்சாவடி அருகே உள்ள சாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீஸார் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்ணின் சடலம் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
போலீசார் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்ததில் கோவை நோக்கி வந்த ஒரு காரில் இருந்து பெண்ணின் சடலம் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதிலிருந்து பெண் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





