--- --:--:-- --

10 வயது சிறுவன் கொலை – தாய் உட்பட 3 பேர் கைது..!

8

10 வயது சிறுவன் கொலை தொடர்பாக அவரது தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லேஸ்வரன் மலைப்பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி 10 வயது சிறுவனின் உடல் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

 

சிறுவனை அடையாளம் காண காவல்துறையினர் தொடர்ந்து முயன்று வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தனலட்சுமி என்பவர் ஆகஸ்ட் மாதத்தில் தனது பேரனை காணவில்லை என புகார் அளித்தார். விசாரணையில் மல்லேஸ்வரன் மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் தனலட்சுமியின் பேரன் என்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் ராகுலின் தாய் நதியாவிற்கும் சுனில்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும் அதற்கு இடையூறாக ராகுல் இருந்ததால் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.

 

இந்த நிலையில் நதியா வீட்டில் இல்லாத நேரத்தில் சுனில்குமார் தாக்கியதில் ராகுல் உயிரிழந்துள்ளதும் உடலைத் தனது மற்றொரு காதலி சிந்துவின் உதவியுடன் காரில் ஏற்றி மலைப்பகுதியில் சுனில்குமார் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இந்த உண்மை தெரிந்தும் அதை மறைக்கும் விதமாக தனது தாயிடம் ராகுல் வெளியூரில் தங்கி படிப்பதாக கூறி நதியா ஏமாற்றி வந்துள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நதியா, சுனில்குமார், சிந்து ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon