--- --:--:-- --

தந்தை செய்த தவறை மன்னிக்க முடியாது – சத்தீஸ்கர் முதல்வர்

4

சாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய தனது தந்தையை ஒருக்காலும் மன்னிக்க முடியாது என சத்தீஸ்கர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். அவரின் தந்தை நந்தகுமார் ஜாதி மோதலை தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

 

இதனால் அவர் மீது சட்டிஸ்கர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பூபேஷ் பாகல் அரசு ஒவ்வொரு மதத்தையும் சமூகத்தையும் மதிக்கிறது என கூறினார்.

 

குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான தந்தையின் கருத்து சமூக ஒற்றுமையை குலைக்கிறது என்று கூறிய அவர் தனது தந்தையின் கறுத்துக்க்கு வேதனைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

ஒரு மகனாக தனது தந்தையை மதிப்பதாகவும் ஆனால் மாநில முதலமைச்சராக அவரை மன்னிக்க முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon