தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகை த்ரிஷா..!
நடிகை த்ரிஷா அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயகி படத்தில் நடித்த பின் நடிக்காமல் இருந்த த்ரிஷா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக அறுபத்தி ஏழு வயதான பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரியவருகிறது.
முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் பல்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.






