தலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படும்..!
தலிபான்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து தலிபான்களுக்கு எதிராக சில பதிவுகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாலும் அவர்களுக்கு ஆதரவாக சிலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிறுவனங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் நிறுவனத்தில் தலிபான்களின் கணக்குகள் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தலிபான்களுக்கு ஆதரவான பதிவுகளை நீக்குவதுடன் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் எனவும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.






