--- --:--:-- --

70 வயது மூதாட்டிக்கு ஒரே நாளில் இரண்டு முறை கொரொனா தடுப்பூசி செலுத்தியதால் அதிர்ச்சி..!

2

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே 70 வயது மூதாட்டிக்கு ஒரே நாளில் இரண்டு முறை கொரொனா தடுப்பூசி செலுத்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெரிய கடல் பகுதியை சேர்ந்த அலமேலு என்பவர் சரபோஜிராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தடுப்பூசி செலுத்த சென்றுள்ளார். அப்போது பெண்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்பொழுது ஓரமாக ஒரு நிழலில் சென்று அமர்ந்துள்ளார் .

 

இந்த நிலையில் ஆண்கள் கூட்டம் குறைவாக இருந்தால் அந்த வரிசைக்கு பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் பாட்டியை அனுப்பியதாகக் கூறப்படும் நிலையில் அவருக்கு இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

 

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகாதாரத்துறையினர் இதனை மறுத்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon