--- --:--:-- --

ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த விரைவில் பயிற்சி – செங்கோட்டையன்

senkottaiyan_710x400xt

10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்னும் நான்கு நாட்களில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். சென்னை சேத்துபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுமை ஆசிரியர் விருதினை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். திறன் மேம்பாடு என்ற முறையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த உரிய பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது என்றார்.

 

மலேஷியாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அரசு பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்களுக்கு டேப் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் இதன் மூலம் பாடப்புத்தகங்கள் இல்லாமல் குயு ஆர் கோட் மற்றும் பி‌டி‌எஃப் வடிவில் பாடங்களை பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியை கொண்டு வந்து உள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon