--- --:--:-- --

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது..!

5

யிலாடுதுறை அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் விருப்ப ஓய்வு பெற்றிருந்த நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குத்தாலம் அடுத்த மங்கைநல்லூர் அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கந்தன்.

 

இவர் 2019 ஆம் ஆண்டிலிருந்து வயது மூப்பு காரணமாக விருப்ப ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.

 

இதனிடைய பள்ளி செயல்பட்டபோது மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் கந்தன் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் குமார் மீதான குற்றம் ஊர்ஜிதம் ஆனதால் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அதன் அடிப்படையில் வீட்டில் ஓய்வு எடுத்தவரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் குற்றச்சாட்டில் கைதான நிலையில் மயிலாடுதுறையில் 2019ஆம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon