முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடப் பிரச்சினை தொடர்பான விசாரணையில் முதியவரை கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ரத்தின கோட்டை கிராமத்தை சேர்ந்த உறவினர்களான ஆறுமுகம் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் குப்பை கொட்டுவதில் இடப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து தலைமை காவலர் முருகன் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ராதாகிருஷ்ணன், தலைமை காவலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆத்திரம் அடைந்த முருகன் முதியவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன் கன்னத்தில் அறைந்துள்ளார். இதை அங்கிருந்தோர் வீடியோவாக பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து முதியவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
வீடியோவை பார்த்த காவல் கண்காணிப்பாளர் தலைமை காவலர் முருகன் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்ததுடன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.







