--- --:--:-- --

போதை விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் உட்பட 8 பேர் கைது..!

3

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்ட இளம் பெண் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டின் ஒரு சாலையில் உள்ள தனியார் விடுதியில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது மூன்று அறைகளில் கோழிக்கோட்டை சேர்ந்த 8 பேர் தங்கியிருந்தது தெரியவந்தது.

 

அந்த அறையில் தடை செய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இளம்பெண் ஒருவர் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon