--- --:--:-- --

தண்டால் உடற்பயிற்சி செய்த மணமகள்..!

4

தாலி கட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் மணமகள் திருமண அலங்கார உடையுடன் தண்டால் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

 

இந்த கொரோனா வைரஸ் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவருக்கும் உணர்த்தியது. இத்தகைய விழிப்புணர்வு திருமண கோலத்தில் உள்ள மணமகளின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது போலும்.

 

லெஹங்கா எனப்படும் தங்களின் பாரம்பரிய உடையை அணிந்து உள்ள வட இந்திய பெண் செய்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மணமேடையில் நடனம் ஆடுவது போன்றவற்றிலிருந்து இந்த மணப்பெண் மாறுபட்டு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

திருமண உடை கை நிறைய வளையல்கள், நெற்றிச்சுட்டி தங்க ஆபரணங்கள் அணிந்த படி தாலி கட்டுவதற்கு தயாராக உள்ள நிலையில் இந்த மரபின் உடற் பயிற்சியில் ஈடுபட்டது விவாதப் பொருளாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon