கொரொனா பாதிப்புக்கு பின் மாரடைப்பு ஏற்படும்..!
கொரொனா பாதிப்புடைய நோயாளிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மருத்துவ இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.
அதற்கு பிறகான பின்பாதிப்புகள் குறித்து ஆய்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் கொரொனா வருவதற்கு முன்பாக தடுப்பூசி மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.






