ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்..!
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் பிவி சிந்து டென்மார்க்கின் மியாவை எதிர்கொண்டார்.
41 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சிந்து21-15, 21- 13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
ஜப்பானின் அகாணியமகொச்சி கொரியாவின் கிம்கேயன் ஆகியோருக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறுபவர் உடன் சிந்து தனது அடுத்த ஆட்டத்தில் மோதுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டிகளில் இந்திய வீரர்கள் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில் பிவி சிந்து மட்டுமே நம்பிக்கையுடன் களத்தில் இருக்கிறார்.






