--- --:--:-- --

புதையல் இருப்பதாக கூறி 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டிய கும்பல்..!

5

பெரம்பலூர் அருகே புதையல் இருப்பதாக கூறி மாந்திரீக பூஜை செய்து வைத்திருக்கும் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டி 7 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விளாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பிரபு ஐஸ் வியாபாரம் செய்பவர்.

 

இவர் புதையல் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் பரமத்திவேலூரை சேர்ந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி என்பவரின் உதவியோடு நண்பர்களையும் அழைத்து புதையலை எடுப்பதற்காக மாந்திரீக பூஜை செய்து இருக்கிறார்.

 

பின்னர் வீட்டுக்குள் இரவு பகலாக தோண்டி பணி மேற்கொண்டுள்ளனர். 2 நாட்களாக பிரபுவின் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

 

காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்றபோது புதையலுக்காக குழி தோண்டிக் கொண்டிருந்த 7 பேரை பிடித்துள்ளனர். நரபலி போன்ற விபரீத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon